குடும்பப் பகிர்வு உறுப்பினர்களின் வகைகள்
குடும்பப் பகிர்வுக் குழுவின் உறுப்பினர்கள் தங்கள் வயதைப் பொறுத்து வெவ்வேறு பொறுப்புகளைப் பெறலாம்.
குறிப்பு: ஒருவர் வயது வந்தவராகவோ பிள்ளையாகவோ கருதப்படும் வயது நாடு அல்லது வட்டாரத்திற்கு ஏற்ப மாறுபடும்.
ஒருங்கிணைப்பாளார்: குடும்பப் பகிர்வுக் குழுவை அமைக்கும் பெரியவர். ஒருங்கிணைப்பாளர் குடும்ப உறுப்பினர்களை அழைக்கலாம், அவர்களை அகற்றலாம், குழுவைக் கலைக்கலாம்.
பெரியவர்: குடும்பப் பகிர்வுக் குழுவில் உள்ள 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்.
பெற்றோர்/பாதுகாவலர்: குழுவில் உள்ள குழந்தைகளுக்கான பெற்றோர் கட்டுப்பாடுகளை நிர்வகிக்க உதவக்கூடிய, குடும்பப் பகிர்வுக் குழுவின் பெரிய உறுப்பினர். குடும்பப் பகிர்வுக் குழுவில் ஒருங்கிணைப்பாளர் ஒரு பெரியவரைச் சேர்க்கும்போது, அந்தக் குழுவில் பிள்ளை அல்லது பதின்ம வயதினர் உறுப்பினர்களாக இருந்தால் அவரைப் பெற்றோராகவோ அல்லது பாதுகாவலராகவோ நியமிக்கலாம்.
பிள்ளை அல்லது பதின்ம வயதினர்: குடும்பப் பகிர்வுக் குழுவில் உள்ள 18 வயதிற்குட்பட்ட உறுப்பினர். தங்களுக்கென ஒரு கணக்கை உருவாக்க முடியாத அளவிற்கு இளமையாக இருக்கும் குழந்தைக்கு ஒருங்கிணைப்பாளர், பெற்றோர் அல்லது பாதுகாவலர் Apple கணக்கை உருவாக்க முடியும். உங்கள் பிள்ளைக்காக Apple கணக்கை உருவாக்குதல் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.